• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கத்தியை காட்டி போலீசுக்கு மிரட்டல் : 3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் கத்தியுடன் நின்றிருந்த மூன்று பேரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மையவாடி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகம் படும்படியாக நின்றிருந்ததோடு, கத்தியை காட்டி போலீசை மிரட்டி உள்ளனர். பின்னர்  மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.  

விசாரணையில், தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்த சுப்புராஜ் ( 24 ) மற்றும் 2 சிறார்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்த கத்தியை கைப்பற்றிய போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

  • Share on

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் கிடையாது... இன்று முதல் கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து தான் பஸ்கள் இயக்கம்!

தூத்துக்குடியில் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு : 4 பேர் கைது!

  • Share on