• vilasalnews@gmail.com

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் கிடையாது... இன்று முதல் கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து தான் பஸ்கள் இயக்கம்!

  • Share on

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் இன்று நவம்பர் 4 ஆம் தேதி முதல் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து தான் எல்லா பேருந்துகளும் இயக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் அண்ணா பேருந்து நிலையமும், மதுரை - நெல்லை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் பேருந்து நிலையமும் இயங்கி வருகிறது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜபாளையம், சங்கரன் கோவில், சிவகாசி, அருப்புக்கோட்டை, வாளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் பேருந்து நிலையத்தில் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துக்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் அதிகம் பயணம் செய்ய பயன்படுத்தி வரும் அண்ணா பேருந்து நிலையத்தில் 2024 - 25 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூலதன மானிய நிதி இயக்குதல் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. எனவே இன்று நவம்பர் 4ஆம் தேதி முதல் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பஸ்கள் அனைத்தும் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் மது குடித்ததை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!

தூத்துக்குடியில் கத்தியை காட்டி போலீசுக்கு மிரட்டல் : 3 பேர் கைது!

  • Share on