• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஆத்மாக்களின் திருநாள் அனுசரிப்பு!

  • Share on

ஆத்மாக்களின் திருநாள் என்று அழைக்கப்படும் கல்லறை திருநாள் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் மலர்தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஆத்மாக்களின் திருநாள் என்று அழைக்கப்படும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவாக அவர்கள் ஆத்மா சாந்தி பெற அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கு அதிகாலையே சென்று சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வழிபடுவது வழக்கமாகும்.

அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள கல்லறை தோட்டங்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறை தோட்டங்களை கல்லறைகளை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.

அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள பல ஏக்கர் பரப்பளவு கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டமானது பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கிடந்த நிலையில், அதனை சுத்தம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, கல்லறை தோட்டம் மிகவும் தூய்மை செய்யப்பட்ட நிலையில், இன்று அங்கு மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் வந்தவர்கள் சுத்தம் செய்ய குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

  • Share on

கந்த சஷ்டி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தொடக்கம்!

தூத்துக்குடியில் மது குடித்ததை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!

  • Share on