தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் எஸ்.எஸ்.ராஜன் கோப்பை போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் எஸ்.எஸ்.ராஜன் கோப்பை போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 3.11.2024 ஞாயிறு காலை 7 மணி அளவில் தூத்துக்குடி பெரிசன் பிளாசா எதிரே அமைந்துள்ள JMJ கிரிக்கெட் பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.
வீரர்கள் 1.09.1984 அன்றோ அதற்கு பின்னரோ 31.08.2011 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும். கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் தங்களின் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (100kb க்குள்) ஆதார் அட்டை PDF பிறப்பு சான்றிதழ் PDF இவை மூன்றையும் டிஜிட்டல் முறையில் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் பிறந்த எந்த வீரரும் பங்கு பெறலாம். வீரர்கள் கிரிக்கெட் உடை (whites, shoes) மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அணிந்து தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயளாலர் கிறிஸ்பின் (80156 21154), இணை செயளாலர் சுப்ரமணியன் (87540 04377) துணை செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் (99448 33333) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.