• vilasalnews@gmail.com

பங்காரு அம்மா மக்கள் நலத்திட்டம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி!

  • Share on

தூத்துக்குடியில், மேல்மருவத்தூர் பங்காரு அம்மா மக்கள் நலத்திட்டம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி நடைபெற்றது. 

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் சிறப்பு குருவழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருள் உத்தரவின்படி 39ம் ஆண்டு தீபாவளி சமுதாயப் பணி நடைபெற்றது. 

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரையண்ட் நகர் 1வது தெரு நேசக்கரங்கள் இல்லம், ஹீல் அறக்கட்டளை முதியோர் இல்லம், பால் பாண்டி நகர் நியு நேசக்கரங்கள் முதியோர் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோர் பள்ளி, லூசியா பார்வையற்றோர் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள், சிதம்பரநகர் பாசக்கரங்கள் முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி பார்வையற்றோர் இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு நெய் மைசூர்பாகு, அதிரசம், முறுக்கு, மிக்சர், காரவடை, உளுந்து வடை உள்ளிட்ட பலகாரங்கள் மற்றும் 108 பேருக்கு ஆடைகள், போர்வைகள், கொசு வலைகள் ஆகியவை வழங்கப்பட்டது. 

சமுதாயப் பணி நிகழ்வில் திருவிக நகர் சக்தி பீட தலைவர் சக்தி. ஆர்.முருகன், துணைத் தலைவர் திருஞானம், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளர்கள் தனபால், தமிழரசன், பூல் பாண்டி, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் கோபிநாத், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பத்மா, கிருஷ்ண நீலா, பிரியா, அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் தூத்துக்குடியில் பெண்கள் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழா!

எட்டயபுரம் அருகே வாலிபர் எரித்துக் கொலை : தந்தை, சகோதரர் உள்பட 4 பேர் கைது!

  • Share on