• vilasalnews@gmail.com

தூத்துக்குடி கேஎப்சியின் தரம் எப்படி இருக்கு? இதோ நீங்களே தெரிந்து கொள்ளலாம்!

  • Share on

தூத்துக்குடி கேஎப்சி சார்பில் வாடிக்கையாளர்களை தங்கள் சமையலறைகளுக்கு அழைத்துச் செல்லும் 'ஓபன் கிச்சன்ஸ்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி கேஎப்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மிருதுவான, மொறுமொறுப்பான மற்றும் நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையுடன் அனைத்து வகை உணவுகளையும் கேஎப்சி அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நம்பகத் தன்மையை அவர்களிடம் வெளிப்படையாக காட்டும் வகையில் "ஓபன் கிச்சன்ஸ்" என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில், தங்கள் வாடிக்கையாளர்களை கேஎப்சி தாங்கள் உணவு தயாரிக்கும் சமையல் அறைக்கே அழைத்துச் சென்று தங்களின் உணவு தயாரிக்கும் முறைகள் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படைத் தன்மையுடன் காட்ட இருக்கிறது. கேஎப்சி இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சுவையுடன் கூடிய சிக்கன்களை வழங்கி சிக்கன் பிரியர்களை மகிழ்வித்து வருகிறது. 

கேஎப்சி இந்தியாவின் உணவு வகைகளைப் பொறுத்தவரை, பிரபலமான ஹாட் & கிரிஸ்பி பக்கெட், ஜிங்கர் பர்கர், பாப்கார்ன் சிக்கன், அத்துடன் உள்ளூர் சுவைகளுடன் கூடிய கேஎப்சி சிஸ்ஸா, ரைஸ் பவுல்ஸ், வெஜ் மற்றும் தந்தூரி ஜிங்கர் உள்ளிட்ட உணவுகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 

இவை அனைத்து வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி சுவைத்திடும் உணவுகளாகும். அந்த வகையில், அதன் புதிய வரவாக தாய் ஸ்பைசி, கொரியன் டேங்கி, அமெரிக்கன் நாஷ்வில்லி, இந்தியன் தந்தூரி மற்றும் இந்தியன் ஸ்பைசி வெஜ் போன்ற பல்வேறு உணவுகளும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 


இந்த நிலையில் தங்கள் சமையல் அறையில் உள்ள சமையல் கலைஞர்கள் எவ்வாறு உணவுகளை சமைக்கிறார்கள் என்பது குறித்தும் ஒவ்வொரு சிக்கனும் எவ்வாறு சுவையூட்டப்படுகிறது என்பது குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவற்றை நேரடியாக பார்க்கும் "ஓபன் கிச்சன்ஸ்" திட்டத்தை கேஎப்சி துவக்கி உள்ளது. 


மேலும் இதன் சமையல் கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் பேசி கலந்துரையாடுவதற்கும், ஒவ்வொரு உணவு இங்கு எவ்வாறு சுவையூட்டப்படுகின்றன. மேலும் அவற்றில் எந்தெந்த மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டுகின்றன மற்றும் அவை எவ்வாறு தூய்மைப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும்.


கேஎப்சி-யின் சிக்னேச்சர் மிருதுவான சிக்கனை எவ்வாறு மிகச் சிறந்த மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதோடு, சர்வதேச பாதுகாப்புத் தரங்களுடன் உயர்தர உள்ளூர் சப்ளையர்களிடம் இருந்து 100 சதவீத பாதுகாப்புடன் கோழிகள் எவ்வாறு வாங்கப்படுகிறது. மேலும் அதை வாங்குவதில் இருந்து சமைத்து நுகர்வோருக்கு பரிமாறுவது வரை மேற்கொள்ளப்படும் 34 கடுமையான சோதனைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். 


அத்துடன் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி கோழி எவ்வாறு வெட்டப்படுகிறது மற்றும் வறுத்தல் பற்றிய விரிவான செயல்முறையை வாடிக்கையாளர்கள் நேரடியாக பார்க்கலாம்.


சிக்கன் தயாரிப்பதில் ஒரு குறிப்பிட்ட முறை உள்ளது, அதில் ஒவ்வொரு சிக்கன் துண்டிலும் பிரெட் துகள்களை சேர்த்து அது சிக்கனில் நன்றாக படும்படி தோய்த்து அது 170 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது. மேலும் கேஎப்சி-ன் அனைத்து உணவகங்களிலும் சிக்கன் அவ்வப்போது சூடாக தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.


மேலும் கேஎப்சி சர்வதேச சமையல் தரங்களைப் பின்பற்றுவதோடு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகிறது மற்றும் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. இங்கு வாங்கப்படும் எண்ணெயைப் பொறுத்தவரை, அனைத்து எண்ணெய்களும் பாதுகாப்புத் தரங்களையும் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிசெய்ய கடுமையான சோதனைகளுக்கு உட்படுகிறது. 


இந்த பிராண்ட் மெக்னீசியம் சிலிக்கேட் போன்ற அனுமதிக்கப்பட்ட வடிகட்டுதல் முகவர்களைப் பயன்படுத்துகிறது, இது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற உணவு தர ஆணையங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்னீசியம் சிலிக்கேட்டை வடிகட்டுதல் முகவராக அங்கீகரித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் வழங்கிய தனது உத்தரவில் கூறியுள்ளது.


கேஎப்சி-யில் வழங்கப்படும் அனைத்து உணவும், பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், புதியதாகவும், மிருதுவாகவும், சுவையாகவும் வழங்கப்படுகிறது. அனைத்து உணவுப் பொருட்களும் காலாவதியாகும் நாட்களுக்கு முன் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடியும்பட்சத்தில் அவற்றை கேஎப்சி பயன்படுத்துவதில்லை. 


மேலும் இதன் ஒவ்வொரு உணவகமும் தூய்மையை கண்டிப்பாக கடைபிடிக்கிறது. அனைத்து சைவ மற்றும் அசைவ உணவுகளும் தனித்தனியாக தயாரிக்கப்படுகின்றன. இதற்கான எண்ணெய், பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் தனித்தனியாக உள்ளன. இவற்றில் பணிபுரிபவர்களின் ஆடைகளும் பச்சை மற்றும் சிவப்பு என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.


இந்த ஓபன் கிச்சன்ஸ் முன்முயற்சியானது, கேஎப்சி-ன் வெளிப்படைத்தன்மை, தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களை வாடிக்கையாளர்களுக்கு காட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் தற்போது இந்தியா முழுவதும் 240க்கும் மேற்பட்ட நகரங்களில் 1200க்கும் மேற்பட்ட உணவகங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  • Share on

எட்டையபுரத்தில் உமறுப்புலவர் 382வது ஆண்டு பிறந்த நாள் விழா : அதிமுக நகர செயலாளர் ராஜ குமார் தலைமையில் மரியாதை!

பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் தூத்துக்குடியில் பெண்கள் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழா!

  • Share on