தூத்துக்குடி நகர் பகுதிகளில் நாளை (அக்.16) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய செய்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 16.10.2024 புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1வது கேட், 2வது கேட், மட்டக்கடை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன்ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு,
தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம் முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கார் நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.