தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மருதன்வாழ்வு கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எட்வின், பணி மேற்பார்வையாளர் சங்கர், கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஊராட்சி செயலர் ராஜன், திமுக ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் பிரியா, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ராகுல், மருதன்வாழ்வு கிளை செயலாளர்கள் ராஜன், சண்முகசிகாமணி, பாலசந்திரன், கிளை பிரதிநிதி செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.