• vilasalnews@gmail.com

குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற நேரத்தில் தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!

  • Share on

தூத்துக்குடியில் கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி கீழ அழகாபுரியைச் சேர்ந்தவர் ஜெயராம் மகன் பன்னீர்செல்வம் (34). இவர் தசரா திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 11ந் தேதி இரவு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று விட்டார். இந்தநிலையில், நேற்று மாலை ஊர் திரும்பிய அவர், வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3பவுன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

  • Share on

எட்டயபுரத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

மருதன்வாழ்வு கிராமத்தில் புதிய பேவர் பிளாக் சாலை : சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்!

  • Share on