தூத்துக்குடி வடக்கு மாவட்டம், எட்டயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் பேரூராட்சி அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் மற்றும் எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன் என்கே பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வரதராஜப்பெருமாள், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி கனகசுந்தரம், மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி,
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் முருகேஸ்வரி, வெம்பூரார், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், வண்டானம் கருப்பசாமி, தனஞ்செயன், தனவதி, பால்ராஜ், மகேஷ் நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள், மாரியப்பன், ஒன்றிய அவைத் தலைவர் தர்மராஜ் சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ், ஒன்றிய சிறுபான்மையினர் அணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் கண்ணன், ஆவின் தலைவர் தாமோதரன், மணியாச்சி பஞ்சாயத்து துணை தலைவி ரேவதி, மகளிரணி பிரபாவதி, ஒன்றிய இணைச் செயலாளர் மணிராஜ், பஞ்சாயத்து தலைவர் லட்சுமி முனியசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் செல்வம், ஒன்றிய மகளிரணி செயலாளர் செல்வி, அதிமுக நிர்வாகிகள் கதர் ஸ்டோர் ராமசுப்பு, கூடப்பன், விஜயராஜ், பால்பாண்டி, நிதீஸ், கண்ணன், பேரூராட்சி நிர்வாகிகள் கணபதி, அய்யம்மாள், சுப்புலட்சுமி, சந்திரன், வேலுச்சாமி, சிவ மாரியப்பன், மாலையப்பன், மனோகரன், ரத்தினம், சொக்கன், செல்வி, சாந்தி கிளைச் செயலாளர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.