தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாராத்துறை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டி மாப்பிள்ளையூரணியில் உள்ள துணை இயக்குநர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்ப்பட்ட செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகப்பேறு நிதி உதவித்திட்டம் தாமதம் ஆகுவதை சரிசெய்ய வேண்டியும்,பெண் உதவியாளருக்கு மாத ஊதியம் ரூ.2000/- வழங்கிட வேண்டியும், பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், பெண் சங்க நிர்வாகிகள் என்பதாலயே அச்சுறுத்துவது எதிரான நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும் எனவும், மினி கிளினிக்குகளான மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனைப் பணியாளர்களை அதற்கென்று தனியாக பணி நியமனம் செய்ய வேண்டும் மற்றும் மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியரை பணியமர்த்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.