• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவு பணியின் போது கலப்பையில் சிக்கி டிராக்டர் டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

உழவு பணி செய்து கொண்டிருந்தபோது, கலப்பையில் சிக்கி டிராக்டர் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம்,  பொட்டலூரணி கிராமம், பெருமாள் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அருள் (31), டிராக்டர் டிரைவர். இவர் அந்த கிராமத்தில் வயலில் டிராக்டரில் கலப்பை மாட்டி உழவு பணி செய்து காெண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் கட்டியிருந்த கையிலி, கலப்பையில் சிக்கியது.

இதனால் கலப்பையில் சிக்கிய அருள் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவைர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்  வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்.

  • Share on

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி பலி!

விளாத்திகுளம் அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on