• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி பலி!

  • Share on

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது, பைக் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் செல்லப்பாண்டி (64). இவர் தூத்துக்குடி - எட்டையாபுரம் சாலையில் டி மார்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த வடக்கு சங்கரப்பேரியை சேர்ந்த நீதிராஜன் மகன் கருப்பசாமி (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

தூத்துக்குடியில் புதிய துறைமுகம் முன்பு நிறுத்தப்பட்ட பைக்கை திருடிய வாலிபர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவு பணியின் போது கலப்பையில் சிக்கி டிராக்டர் டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on