தூத்துக்குடியில் புதிய துறைமுகம் முன்பு நிறுத்தப்பட்ட பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் செல்வம் (39). இவர் புதிய துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை புதிய துறைமுகம் கிரீன் கேட் அருகே நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் வந்து பார்க்க போது பைக்கை காணவில்லை.
இதுகுறித்து, அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முத்தையாபுரம் சுந்தர் நகர் 2வது தெருவை சேர்ந்த அபூபக்கர் மகன் சேக் முகமது (22) என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.