• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தொடங்கியது 5ஆவது புத்தக திருவிழா... இறுதி மூன்று நாட்கள் நெய்தல் கலைத் திருவிழா!

  • Share on

தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா - 2024 விழாவானது தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழாவை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையிலும் நடைபெற்றது. இன்று 3ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற இந்த புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா - 2024 நடைபெறுகிறது


விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினா்கள் பங்குபெறும் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து புகைப்பட கண்காட்சியும் நடைபெறுகிறது. மேலும், நெய்தல் கலைத் திருவிழா அக். 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா்.


நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • Share on

தூத்துக்குடியில் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழப்பு!

தூத்துக்குடி மாநகரில் மாற்றுத் திறனாளிகள் குறைகள் தொடர்பான மனுக்கள் அவர்களது வீட்டுக்கே சென்று பெறப்படும் : வடக்கு மண்டல முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

  • Share on