• vilasalnews@gmail.com

தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரி சார்பில் தேசிய போதை தடுப்பு நாள் விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்தார்!

  • Share on
தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரி சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய போதை தடுப்பு நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியில் இயங்கி வரும் போதைப் பொருட்கள் தடுப்பு குழு, அமலோற்பவ மாதா மதுவிலக்கு இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பு மற்றும்  தேசிய மாணவர் படை இனணந்து இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய போதை தடுப்பு நாளாக அனுசரித்து போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இந்த பேரணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள். இந்த பேரணியானது தூய மரியன்னை கல்லூரி முன்பாக புறப்பட்டு கால்டுவெல் பள்ளி பின்புறமாக தொடர்ந்து புனித பேட்ரிக் ஆலயம் வழியாக இரயில்வே ஒன்றாம் கேட் அருகாமையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே ஒன்றுகூடி போதை பொருட்கள் தடுப்பு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் தலைமையில் ஏற்று நிறைவு பெற்றது.  அணைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வர் அருள் சகோதரி முனைவர் ஜெசி பெர்னான்டோ, செயலர் அருள் சகோதரி முனைவர் ஷிபானா, துணை முதல்வர் அருள் சகோதரி முனைவர் எழில் அரசி, இயக்குநர் அருள் சகோதரி முனைவர் ஜோஸ்பின் ஜெயராணி, மாணவியர் விடுதி இயக்குநர் அருள் சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் அனைவரும் இணைந்து பேராசிரியர்கள், மாணவியர் பேரவை மற்றும் குழுக்களின் ஒத்துழைப்போடு  ஒருங்கிணைத்து வழி நடத்தபட்டது. இவர்களோடு தூத்துக்குடி மறைமாவட்ட இளையோர் பணிக்குழுவும் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணிக்குழுவும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.  

மேலும் காந்திய மக்கள் இயக்க தோழர் ஜேசுதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். இந்த பேரணி வழியாக இளம்பெண்கள், இளைஞர்கள் மாணவர்கள் ஒன்றிணைந்து மது போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒரு முயற்சியாக இந்த பேரணி நடத்தப்பட்டது.
  • Share on

காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி மாநகராட்சியில் 100 அடி கொடி கம்பத்தில் தேசிய கொடி.. கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன்., மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!

  • Share on