தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
அண்ணல் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழாவிவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் இன்று துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.