தூத்துக்குடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காமராஜ் நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 5 பேரிடம் அவர் விசாரணை நடத்தினாராம். அப்போது அவர்கள் திடீரென கத்தி, அரிவாளை காட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவனை மிரட்டினராம்.
உடனடியாக போலீசார் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தாளமுத்துநகர் ஆனந்தநகரைச் சேர்ந்த தவ்ஹித் நபிள் (28), நாராயணன்(24), வடக்கு சிலுவைப்பட்டியைச் சேர்ந்த உதயகரன்(22), காமராஜ் நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வசந்த் (21), நேரு காலனியைச் சேர்ந்த மரியஜான்பால்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு அரிவாள், ஒரு கத்தியை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.