தூத்துக்குடி ஸ்பா மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி வி.வி.டி. ரோட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார், அந்த மையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு இருந்த 3 இளம் பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த மையத்தின் மேலாளர், உரிமையாளர் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல தூத்துக்குடியில் வேறொரு பகுதியில் ஒரிரு தினங்களுக்கு முன்பு ஒரு ஸ்பாவில் இதே போல பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.