தூத்துக்குடி பி & டி காலனி 13வது தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் செல்வகணபதி (48). இவர் தூத்துக்குடி வணிகவரி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளாவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
பின்னர் இன்று காலை தூத்துக்குடி வந்துள்ளனர். அப்போது வீட்டில் கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.12,500 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் செல்வ கணபதி புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.