தூத்துக்குடியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் தூத்துக்குடியில் உள்ள குறிப்பிட்ட அந்த ஒரு மசாஜ் சென்டரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு இருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.