• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை நடைபெறவுள்ள நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கான பங்கேற்பு குறித்த விபரம் வெளியீடு!

  • Share on

தூத்துக்குடியில் நாளை (செப்.29) நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அது தொடர்பான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 5ஆவது புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிகவும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது. புத்தகத் திருவிழா 3.10.2024 முதல் 13.10.2024 வரை மற்றும் நெய்தல் கலை விழா 11.10.2024 முதல் 13.10.2024 வருகின்ற சங்கரப்பேரி திடலில் நடைபெறவுள்ளது.


இதனைத்தொடர்ந்து, புத்தகத் திருவிழாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வருகின்ற 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பிரையண்ட் நகர் பிரதான சாலையில் வைத்து நம்ம ஸ்ட்ரீட் (Street) வாழ்விடத்தின் விழா நடைபெற இருக்கிறது. நம்ம ஸ்ட்ரீட் விழாவில் அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, அனைவரும் பங்கு பெறும் வீதி விளையாட்டுகள், குழந்தைகளுக்கு பிடித்தமான நாய்களுக்கான கண்காட்சி நடைபெற இருக்கிறது. 


மேலும் நாய்களுக்கான கண்காட்சியில் தங்களது வளர்ப்பு நாய்களை பங்கேற்க வைக்க விரும்பினால் Dr.A.ஜோசப் ராஜ் 83002 70173 அவர்களை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்து பங்கேற்கலாம். விழாவிற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நிறுத்திவிட்டு விழா நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


அதுமட்டுமல்லாமல் சிதம்பர நகர் 5வது தெரு தொடங்கி பிரையண்ட் நகர் 1 முதல் 12 தெரு (மத்தி) வழியாகவும் விழா நடக்கும் இடத்திற்கு வரலாம். காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரையண்ட் நகர் பிரதான சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.


விழா நடைபெறும் இடத்தில் ஆண்கள் பெண்கள் தனித்தனியாக நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் குடிநீர் வசதி, மின் விளக்கு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விழா நடைபெறும் இடத்தில் ஆண்கள் பெண்களுக்கான கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர மக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு விசேச காணிக்கை!

  • Share on