• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு விசேச காணிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செப்டம்பர் மாத உண்டியல் மூலம் ரூ.5.15 கோடி பணத்துடன் தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் ஆகியவை காணிக்கைகள் கிடைத்தாலும், ஒரு ரூபாய் நாணய மாலை பக்தர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில், கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இந்த மாத உண்டியல்கள் எண்ணும் பணியில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர்,  தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், ரூ.5,15,89,834 ரொக்கப் பணம், 2,352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 61,600 கிராம் பித்தளை, 5,129 கிராம் செம்பு, 13,739 கிராம்  தகரம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1,589 என  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  

இந்த நிலையில், இம்மாதம் வழக்கைத்தை விட உண்டியலில் 1  ரூபாய் நாணயங்களால் கோர்க்கப்பட்ட நாணய  மாலையை ஒன்றை பக்தர் ஒருவர்  காணிக்கையாக செலுத்தியிருந்தார். இந்த வித்தியாசமான ஒரு ரூபாய் நாணய மாலையை காணிக்கையானது பக்தர்கள் விசேசமாகவும் ஆச்சர்யத்த்துடன் பார்க்கப்பட்டு பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடதக்கது.

  • Share on

தூத்துக்குடியில் இளைஞரை தாக்கிய வழக்கு : இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை...தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் நாளை நடைபெறவுள்ள நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கான பங்கேற்பு குறித்த விபரம் வெளியீடு!

  • Share on