• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இளைஞரை தாக்கிய வழக்கு : இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை...தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடியில் நிலத் தகராறு காரணமாக இளைஞரைத் தாக்கிய வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி சுந்தரராமபுரத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவரது மகன் மாரியப்பன் (35). பிளம்பரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர்களான சுப்பையா மகன் சண்முக கந்தவேல்(50), செல்வராஜ் மகன் ஜோதி நவநீதகிருஷ்ணன்(34) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளதாம்.

இது தொடர்பான பிரச்னையில், சண்முக சுந்தரம், நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் மாரியப்பனை கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கினராம். இதில், காயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முக சுந்தரம், நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி சுமதி விசாரித்து, சண்முக சுந்தரம், நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் முருகப்பெருமாள் வாதாடினார்.

  • Share on

தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை: ரூ.1.50 லட்சம் பறிமுதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு விசேச காணிக்கை!

  • Share on