• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களே ரெடியா... நம்ம ஸ்ட்ரீட்!

  • Share on

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் செப்., 29ஆம் தேதி "நம்ம ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


புத்தகத் திருவிழா, நெய்தல் கலைவிழா ஆகியவற்றை முன்னிட்டு, ‘நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெறுகிறது. 


தூத்துக்குடி பிரையண்ட் நகர் பிரதான சாலையில் செப்.,29 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில், வில்லுப்பாட்டு, நடனம், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

  • Share on

பைக் விபத்து : சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை: ரூ.1.50 லட்சம் பறிமுதல்!

  • Share on