தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் ராஜா மகன் ராஜ்குமார் (24). இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த ராஜ்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.