• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 28ஆம் தேதி சைக்கிள் போட்டி!

  • Share on

தூத்துக்குடியில் வருகிற 28ஆம் தேதி அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை  கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதியன்று நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 28.09.2024 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.


போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் எனவும் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000 மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000 மும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 மும் நான்காமிடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.250 மும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.


போட்டிக்கான விதிமுறைகள்: 


போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் சொந்த செலவில் இந்தியாவில் தயாராகும் சாதாரண மிதிவண்டிகளை கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட வயதுச் சான்றிதழுடன் 28.09.2024 அன்று காலை 6 மணிக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வர  வேண்டும்.


அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் வந்தடையும்.போட்டியின் போது நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

திமுகவை யாரும் வெல்ல முடியாது என்ற வரலாற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்து வருகிறார் : ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் மதுபாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 பேர் கைது!

  • Share on