• vilasalnews@gmail.com

திமுகவை யாரும் வெல்ல முடியாது என்ற வரலாற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்து வருகிறார் : ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திமுக பொது உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் :

திமுகவை யாரும் வெல்ல முடியாது என்ற வரலாற்றை தற்போது கொண்டுவந்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அது எல்லா வகையிலும் தமிழக மக்களை காக்கும் திட்டங்களாக இருந்திடும் வகையில் முதல்வர் மு.க.முதல்வர் கவனமாக இருந்து செயல்பட்டு வருகிறார்.

நமது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி எம்பியாக இருக்கக்கூடிய கனிமொழி கருணாநிதிக்கு, மிகப்பெரிய வெற்றியை தந்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பெண்களின் உயர்வுக்குமான குரலாக பாராளுமன்றத்தில் நமது எம்பி கனிமொழியின் குரல் எப்போதும் ஒலித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இளைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் உதயநிதி மேற்கொண்டு வருகிறார் என்பதை இந்நேரத்தில் உங்களுக்கு ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

75 வருட திராவிட முன்னேற்ற கழகத்தின் உழைப்பும் அர்பணிப்பும் தான் இன்று தமிழகத்தை காக்கும் விதமாக திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. நமது தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்பும் 200 க்கும் மேற்மட்ட தொகுதி வெற்றிகளை 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் கொடுக்க வேண்டும் என நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும், இப்படியொரு சிறப்பான ஏற்படுகளை கொடுத்து, அதில் எங்களை கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், ரூ.10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஸ்போட்ஸ் ஷூக்கள் புதிய பறவை ஸ்போட்ஸ் கிளப்க்கு வழங்கப்பட்டது. அதே போல், ஒட்டப்பிடாரம் கேஎப்சி நண்பர்களுக்கு 101 கபாடி பணியன்களும், கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கையால் வழங்கப்பட்டது. மேலும், விரைவில் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஒன்றியச் செயலாளர் இளையராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர்,  தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா செய்திருந்தார். முடிவில் வலசை அசோக்குமார் நன்றி கூறினார்.

  • Share on

அனைத்து தரப்பினரும் உயர வேண்டும் என்ற வகையில் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் : ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!

தூத்துக்குடியில் 28ஆம் தேதி சைக்கிள் போட்டி!

  • Share on