தமிழகத்தில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் உயர வேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் நடைபெற்ற இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திமுக பொது உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்:-
தமிழகத்தில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் உயர வேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிர்கான விடியல் பயணம், பள்ளி மாணவ மாணவியருக்கான காலை உணவு திட்டம் என பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருபவர் தான் நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்ற வகையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடி வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறது நமது தலைவர் தளபதியார் தலைமையிலான திமுக. அந்த வகையில் தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயத்தை 200 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார் .
இந்த நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.