தூத்துக்குடியில் நெல்லையை சேர்ந்த லாரி டிரைவரிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், மேட்டு பிராஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் வைத்தியநாதன் (35). லாரி டிரைவரான இவர், கடந்த 28ஆம் தேதி தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள லாரி செட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது செல்போனை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.
அதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் லாரி டிரைவல் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் இரத்தினவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராமநாதபுரம் கடலாடி பகுதியை சேர்ந்த உமய பாண்டியன் மகன் பார்த்திபன் (27) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவர் திருடிய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.