• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே இளைஞர் வெட்டிக் கொலை : 3 பேர் கும்பல் வெறிச்செயல்!

  • Share on

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் முருகன் (33). இவர் தற்போது புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில், முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதுக்கோட்டை பஜாரில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

பதவி உயர்வு அளிக்கப்பட்ட கண்ணன் யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்!

தூத்துக்குடி அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்து பெண் பரிதபாமாக உயிரிழப்பு!

  • Share on