• vilasalnews@gmail.com

எப்போதும் வென்றானில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை!

  • Share on

எப்போதும் வென்றானில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 


தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் முத்துச்செல்வன் (28). கார் டிரைவராக  உள்ளார். இவரது மனைவி கற்பூர மாரியம்மாள். கணவரிடம் சண்டை காரணமாக கடந்த 14ஆம் தேதி கற்பூர மாரியம்மாள் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம்.


இதையடுத்து, முத்துச்செல்வன் மனைவியை அழைத்து வர சென்றபோது, அவர் வர மறுத்து விட்டாராம். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து எப்போது வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

சாலையில் மல்லுக்கட்டிய ஜிபி முத்து... காது கூசும் அளவுக்கு கெட்டவார்த்தைகளால் சண்டை!

ஒட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் : சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!

  • Share on