• vilasalnews@gmail.com

சாலையில் மல்லுக்கட்டிய ஜிபி முத்து... காது கூசும் அளவுக்கு கெட்டவார்த்தைகளால் சண்டை!

  • Share on

சமூக வலைதளங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிபி முத்து நடுரோட்டில் கோவில் பூசாரியை ‛நா' கூசும் வார்த்தைகளால் ஆக்ரோஷமாக திட்டி சண்டையிட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஜிபி முத்து, உடன்குடியை சேர்ந்தவர். மரப்பொருள் வியாபாரம் செய்துவரும் இவருக்கு,  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெங்கடாசலபுரத்தில் சொந்தமான அம்மன் கோயில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் மகேஷ் என்பவர் பூஜை செய்துவந்த நிலையில், நேற்று முன்தினம் புரட்டாசி பிறப்பையொட்டி மகேஷ் கோயிலில் பூஜை செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த ஜிபி முத்து, மகேஷ் இனிமேல் கோயிலில் பூஜை செய்யக்கூடாது என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பட்டப்பகலில் கேட்கவே நா கூசும் வார்த்தைகளால் ஜிபி முத்து இப்படி பேசியது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக, குலசேகரன்பட்டினம் காவல்நிலைய போலீசாரிடம் மகேஷ் தரப்பினர் புகார் செய்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


பட்டப்பகலில் மிகவும் ஆவேசத்துடன் ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் ஆபாசமாக வார்த்தைகளால் மகேஷை திட்டியுள்ளனர். காலை தூக்கிக்காட்டி ஜிபி முத்து கோபத்துடன் பேசியதையும் பார்க்க முடிந்தது. பிரபலமான யூடியூபர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஜிபி முத்துவின் இந்த நடவடிக்கை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் ஆர்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி இல்லை : எஸ்பி அறிவிப்பு!

எப்போதும் வென்றானில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை!

  • Share on