தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற எந்த அரசு அலுவலகங்கள் முன்பும் எந்தவிதமான ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களின் முன்பு பொதுமக்களோ, தனிநபரோ அல்லது எந்தவிதமான அமைப்புகளோ பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்பாட்டம், போராட்டம், தர்ணா ஆகிவற்றில் ஈடுபட அனுமதி இல்லை. மேலும் மாவட்டத்தில் அந்தந்த உட்கோட்டங்களில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களில் ஆர்பாட்டம், போராட்டம் நடத்தப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டத்திற்கு முன் அனுமதி பெறாமலோ, அரசு அலுவலகங்கள் முன்போ பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்பாட்டம் மற்றும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்