• vilasalnews@gmail.com

தூத்துக்குடி நோக்கி வந்த கார் கவிழ்ந்து விபத்து : அதிஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்!

  • Share on

எட்டையபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 4 பேர் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி செய்து வருகிறார். இந்தநிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி ஒப்பந்தம் தொடர்பாக அவரது நண்பர்களான சேலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (38), ரவி (53), மதுரையைச் சேர்ந்த முகமது யாசின் ஆகிய 4 பேருஞன் காரில் வந்துள்ளார்.


ரவிச்சந்திரன் காரை ஓட்டி சென்றுள்ளார். இந்தநிலையில், எட்டையபுரம் அருகே தாப்பாத்தி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் காரில் வந்த 4 பேரும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து, விபத்தில் சிக்கிய அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

  • Share on

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் குளத்தூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் ஆர்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி இல்லை : எஸ்பி அறிவிப்பு!

  • Share on