தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் குளத்தூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றினார்கள்.
இக்கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி தலைமை வகித்தார்கள். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மிக்கேல் நவமணி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜபாண்டி, புனிதா, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் செல்வபாண்டி ஜெயராமன், செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.
விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம், பேரூர் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் உட்பட கிளை செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.