மகாகவி பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் துாத்துக்குடி மாவட்டம் சார்பில் எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வைத்து அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. அவரது இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான வக்கீல் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் திண்டிவனம் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இலுப்பையூரணி கிளைத் தலைவர் ஹரிஹரன், வடக்கு திட்டங்குளம் கிளைத்தலைவர் முருகன், கோவில்பட்டி இளைஞரணி செயலர் விக்னேஷ் சாஸ்திரிகள், எட்டையபுரம் பொறுப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் விஸ்வநாதன் செய்திருந்தார். வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி மாவட்டத்தலைவர் நன்றி கூறினார்.