அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு புதியதாக டாஸ்மாக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டு வருவதை தடுத்து நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடுவக்குறிச்சியை சேர்ந்த k.ஜோயல் என்பர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
நடுவக்குறிச்சியை சேர்ந்த K.ஜோயல் என்பர் அம்மனுவில் கூறியுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் முதல் சாயர்புரம் செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதாகவும், இந்த பகுதியில் இ.இ.444 சாயர்புரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் சாயர்புரம் 628251 என்ற கூட்டுறவு வங்கிக்கு நேர் எதிராக டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்காக அவசர அவசரமாக கடை கட்டப்பட்டுள்ளதாகவும்,
இப்பகுதியை சுற்றிலும் சுமார் 50 அடி தூரத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, தூயரபாயேல் மருத்துவமனை, ஜி.யு.போய் மகளிர் கல்லூரி, நாசரேத் திருமணடத்தினுடைய கிறிஸ்தவ ஆலயம், சாயர் நினைவு ஆதரவற்ற முதியோர் இல்லம், தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய மார்ட்டீன் தொடக்கப்பள்ளி, மருத்துவமனை மற்றும் கூட்டுறவு வங்கி என குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாணவ-மாணவியர்கள் பலர் வந்து செல்லும் இடத்தில் அவசர அவசரமாக மதுபான கடை அமைப்பதற்கு கட்டிடம் கட்டி திறப்பு விழா நடத்துவதற்கு ஆயத்தப்பணி நடைபெற்று வருவதாகவும்,
அதே பகுதியில் சுமார் 1 கி.மீ தூரத்தில் காமராஜர் நகர் பகுதியில் அரசு மதுபானகடை அரசு சட்டதிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு நடந்து வருகிறதாகவும், அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருந்து வரும் சூழ்நிலையில் அப்பகுதியில் மேலும் ஒரு புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகையால், மேற்கண்ட பகுதியில் டாஸ்மாக் கடை அமையவுள்ளதாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து, அதன் அருகில் உள்ள பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என அம்மனுவில் கூறியுள்ளார்.