• vilasalnews@gmail.com

மேலப்பாறைப்பட்டி விநாயகர் சிலை ஊர்வலம் : கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்!

  • Share on

மேலப்பாறைப்பட்டி அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் வைத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற 4ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மேலப்பாறைப்பட்டி அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் வைத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற 4ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் விழாவில், சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்ஆர்வி கவியரசன்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில், குருமலை ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இந்து மகாசபா தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அஜித்குமார் மற்றும் ஊர் இளைஞர்கள் கோவிந்தராஜ், வேல்முருகன், மகாராஜா, குபேரன், ராஜன், முதீஷ்கண்ணன், அபிஷேக், பூசாரி ஆனந்தராஜ் ஆகியோர்  செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடம்பூர் காவல்நிலையம் உதவி ஆய்வாளர் ராஜதுரை, காவலர் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.

  • Share on

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பிறந்தநாள் விழா - திருச்சிற்றம்பலம், டாக்டர் டைகர் சிவா ஏற்பாட்டில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்திற்கு உணவு வழங்கல்!

தூத்துக்குடியில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்!

  • Share on