தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளரும், 39 வது வார்டு வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம், எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டாக்டர் டைகர் சிவா ஆகியோரது ஏற்பாட்டில் தூத்துக்குடியில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்திற்கு மதிய அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது.
முன்னதாக அங்கு உள்ள குழந்தைகள் எஸ்பி சண்முகநாதனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளை கொடுக்கும் படியும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.