• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கல் நிலைக் கால் வைக்கும் வைபவம்!

  • Share on

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று (செப்.8) கல் நிலைக் கால் வைக்கும் வைபவம் நடைபெற்றது


தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் திருகோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீஆண்டாள் சன்னதி ஆகிய மூன்று சன்னதிகளுக்கும் பழமை வாய்ந்த சிற்ப வேலைப்பாடுடன் கூடிய கல் நிலைக் கால் வைக்கும் வைபவமும் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி கல் மண்டப கட்டுமான வேலை தொடக்கம் பணி இன்று 8.09.2024 (ஞாயிற்று கிழமை) காலை நடைபெற்றது.


இதில், பெருமாள் கோவில் அறங்காவல் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, அறங்காலர்கள் மந்திரமூர்த்தி, சாந்தி, ஜெயலெட்சுமி, ஆறுமுகம், கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி திருப்பணி கமிட்டி அழகர் ஜூவல்லர்ஸ் ஜெயராமன், கருப்பசாமி, மகமை செயலாளர் கந்தப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் காந்தி காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும், தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கட்டுமான திருப்பணிகள் நடைபெற்றாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகத்தில் சிறப்பாக செய்யப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • Share on

ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பிறந்தநாள் விழா - திருச்சிற்றம்பலம், டாக்டர் டைகர் சிவா ஏற்பாட்டில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்திற்கு உணவு வழங்கல்!

  • Share on