போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், போத்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.