• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வ.உ.சி.சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு  அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் 153 வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகரச் செயலாளர்  ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர அயலக அணி அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கலை இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

வ.உ.சிதம்பரனார் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் மரியாதை!

தூத்துக்குடி மாவட்ட வணிகர்களே... கடை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

  • Share on