• vilasalnews@gmail.com

வ.உ.சிதம்பரனார் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் மரியாதை!

  • Share on

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி யின் முழு உருவச் சிலைக்கு, சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவரும், நாடார் பேரவை மாநில தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், அவைத்தலைவர் கன்டிவேல், பொருளாளர் பழனிவேல், துணைச் செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சகாயராஜ், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசு செல்வி, நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ், மகளிர் அணி தலைவி சந்திரா, சமத்துவ மக்கள் கழகம் மாநகரச் செயலாளர் உதயசூரியன், துணைச் செயலாளர் மதியழகன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், வார்டு செயலாளர்கள் பொன் சுகுமார், சந்தன குமார், செல்வராஜ் ,பொன் சுப்பையா, குணசேகரன், ராஜ், நந்தகுமார், மகேஸ்வரன், ஜசக்செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

காங்கிரஸ் சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா : முரளிதரன் மரியாதை!

தூத்துக்குடியில் வ.உ.சி.சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

  • Share on