• vilasalnews@gmail.com

சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை

  • Share on

தூத்துக்குடியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை குழு தலைவர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடந்தது

இக்கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமைந்திட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் கழகப் பணிகளை , கடமை உணர்வோடு எவ்வாறு ஆற்ற வேண்டும், அதிமுக அரசின் சாதனைகளை பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் விரிவாக கொண்டு சேர்த்து என ஆலோசனை வழங்கினார்.

அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி ஆவின் தலைவர்  என் சின்னதுரை முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் மாவட்டக் பொருளாளர் அமலி ராஜன், பகுதி செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தளபதி பிச்சையா, தலைமை நட்சத்திர பேச்சாளர்  கருணாநிதி, முன்னாள் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கழகச் செயலாளர்  ஆறுமுகம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன்,  முன்னாள் மாவட்ட பொருளாளர்  ஜெபமாலை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  பிடிஆர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

புதூர் அருகே வாகன விபத்து - சின்னப்பன் எம்எல்ஏ, விபத்தில் சிக்கியவர்களை உடனிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

டாஸ்மாக் கடை அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

  • Share on