தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளி தரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.