திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கட்சி செயல்வீரா்கள் கூட்டம் நடைபெறும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (31.08.2024) தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில், போல் பேட்டை பகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டம், அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், வட்ட பிரதிநிதிகள் மற்றும் போல் பேட்டை பகுதி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.