தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக புதிய குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்த 24 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.