• vilasalnews@gmail.com

தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து மேயரிடம் மனு அளித்த மதிமுக!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஜெஎஸ் நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இம்முகாமில், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், தொழிற்சங்க செயலாளர் அனல்டேவிட், பொய்யாழி ஆகியோர் அளித்த கோாிக்கை மனுவில் "தூத்துக்குடி கட்டபொம்மன் நகா் நான்கு முனை சந்திப்பில் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் போதிய மின்விளக்கு வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது, உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தரவேண்டும், புதிய தார்சாலை போடப்பட்ட இருபகுதிகளிலும் சரள் மண் அடித்து சமப்படுத்த வேண்டும். 


கட்டமொம்மன்நகர் நான்கு முனை சந்திப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பட்ட பின் வேகத்தடை அமைக்கபபடாமல் இருக்கிறது அதை உடனடியாக அமைத்து கொடுத்து விபத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோாிக்கையை முன் வைத்து மனு அளித்தனர். 

  • Share on

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குறையும் மனுக்கள்... காரணத்தை விவரித்த தெற்கு மண்டல தலைவர்!

தூத்துக்குடியில் புதிய குடிநீர் இணைப்பிற்கு இனி கவலை இல்லை : மேயர் ஜெகன் பெரியசாமி கொடுத்த அசத்தல் அறிவிப்பு!

  • Share on