• vilasalnews@gmail.com

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குறையும் மனுக்கள்... காரணத்தை விவரித்த தெற்கு மண்டல தலைவர்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஜெஎஸ் நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, வரவேற்றார். 

இதில், பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு கட்டடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். 

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:-


வாரத்தில் ஒரு நாள் மண்டல வாரியாக குறை தீர்க்கும் கூட்டம் கட்டாயம் நடக்கும். புதன்கிழமை ஏதேனும் விடுமுறை தினம் ஏற்பட்டால் அதற்கு மாற்றாக வியாழக்கிழமை நடைபெறும்.

மாநகராட்சியில் பொதுமக்கள் கட்டக்கூடிய எந்தவொரு தொகைக்கும் அதற்கான ரசீதை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். மழை நீர் சாலைகளில் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முத்தையாபுரத்தில் ஜெஎஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. முத்தையாபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து, இளைஞர்கள் பொதுமக்களுக்கு தேவையான வகையில் பூங்கா அமைக்கப்படும்.

புதிய வீடு கட்டுபவர்கள் உட்பட, புதிய குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் காலையில் நீங்கள் இந்த முகாமில் மனு கொடுத்தால், மாலையிலேயே உடனே இணைப்பிற்கான ஆணை வந்துவிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். எனக் கூறினார்.

முன்னதாக பேசிய மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி:-


ஒவ்வொரு  வாரமும் மண்டல வாரியாக மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறக்கூடிய தெற்கு மண்டல குறைதீர்க்கும் கூட்டமானது குறைந்து காணப்படுகிறது. அதற்கு காரணம் மாநகராட்சியின் செயல்பாடுதான்.

முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக ஆனா பிறகு சில திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவார். அந்த திட்டத்தில் ஒன்று தான் மக்களின் குறைகளை கூறும் புகார் பெட்டி. என்னைக்கு இந்த புகார் பெட்டியில் ஒவ்வொரு புகாராக குறைந்து, புகார் பெட்டி காலியாகிறதோ அன்று தான் நல்லாட்சி நடக்கிறது என்று அர்த்தம் என்று நடிகர் அர்ஜூன் கூறுவார்.

ஆகவே, மாநகராட்சியின் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுவதால், குறைகள் இன்றி மக்கள் வாழத்தொடங்கியுள்ளனர். இதுவே நல்லாட்சி நடைபெறுவதற்கான சாட்சி என கூறினார்.


மேலும், இன்று நடைபெற்ற கூட்டத்தில்  பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு 20 நிமிடத்தில் அச்சான்றிதழை கூட்டத்திலேயே உடனடியாக மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினாா் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் துணை ஆணையா் ராஜாராம், பொறியாளா் சரவணன், உதவி ஆணையர் கல்யாண சுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலர் குருவையா, நகா்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளா் விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் நடேசன் டேனியல், பிரசாந்த், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராபின், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் அண்ணாமலை உருவபொம்மையை எரித்த அதிமுகவினர்!

தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து மேயரிடம் மனு அளித்த மதிமுக!

  • Share on